Sunday, 21 December 2025

புத்தக அறிமுகம்- "சாம்பலின் சங்கீதம்"

 லயன் லைப்ரரி வெளியீடு

(Tamil Version of the Graphic Novel "La Bombe/The Bomb- The Weapon that changed the World " by writers Alcante and Laurent-Frédéric Bollée, and illustrator Denis Rodier.)

தமிழாக்கம்- எஸ்.விஜயன்- கார்த்திகைப் பாண்டியன் 




தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் 'லயன் மேக்னம் ஸ்பெஷல்', 'இரத்தப்படலம்', மற்றும் 'மின்னும் மரணம்' போன்ற வெளியீடுகள் எப்படி வாசகர்களால் கொண்டாடப்பட்டனவோ, அதே வரிசையில் மற்றுமொரு பிரம்மாண்டமான மைல்கல்லாக அமைந்திருக்கிறது இந்த "சாம்பலின் சங்கீதம்". புத்தகத்தை கையில் ஏந்தும்போதே அதன் கனமும், தரமும் வியக்க வைக்கிறது. அச்சுத்தரமும், பைண்டிங்கின் நேர்த்தியும் ஒரு சர்வதேசப் பதிப்பை கையில் வைத்திருக்கும் உணர்வைத் தருகின்றன.

இந்த புத்தகத்தின் மிகப்பெரிய பலமே அதன் மேக்ஸி சைஸ் வடிவமைப்புதான். ஓவியர் டெனிஸ் ரோடியரின் அற்புதமான ஓவியங்கள் பெரிய அளவில் விரியும் போது, அமெரிக்கா மற்றும் ஹிரோஷிமா நகரத்து வீதிகளுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. ஓவியங்களின் பிரம்மாண்டம் கதைக்கு உயிரூட்டுவதோடு, அணுகுண்டு வெடிப்பின் வீரியத்தையும் உணர வைக்கிறது.

ஒரு பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய நேற்றைய அதிகாலை நேரத்தில், சோர்வு இருந்தாலும் ஆர்வ மிகுதியால் சும்மா புரட்டிப் பார்க்கலாம் என்றுதான் புத்தகத்தைப் பிரித்தேன். ஆனால், மேக்ஸி சைஸ் ஓவியங்களின் ஈர்ப்பு என்னை உள்ளே இழுத்துச் சென்றுவிட்டது. களைப்பையும் மறந்து, தொடர்ந்து 4 மணி நேரம் வாசித்து, புத்தகத்தை ஒரே மூச்சில் முடித்த பிறகுதான் கீழே வைத்தேன். அந்தளவுக்கு சித்திரங்கள் கதையோடு நம்மைப் பிணைத்துவிடுகின்றன. மொழிபெயர்ப்பும் மிக இயல்பாக, நேர்த்தியாக அமைந்துள்ளது.

இதே தரத்திலான ஒரு கிராஃபிக் நாவலை ஆங்கிலத்தில் வாங்க வேண்டுமென்றால், லயனின் விலையை விடக் குறைந்தது 4 முதல் 5 மடங்கு அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால், தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல், சாமானிய வாசகனும் வாங்கும் விலையில் இதைக் கொண்டு வந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. காமிக்ஸ் கலையின் மீது தீராத காதலும், பிரமிப்பும் கொண்ட ஒரு எடிட்டரால் மட்டுமே இலாப நோக்கையும் தாண்டி இத்தகைய சாதனையைச் செய்ய முடியும்.

எனினும், இவ்வளவு அற்புதமான படைப்பில் ஒரு சிறிய நெருடல் மட்டும் தென்பட்டது. நாஜிக்களின் சின்னமான Hakenkreuz-ஐக் குறிக்க 'ஸ்வஸ்திகா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். பல்லாயிரம் ஆண்டுகளாக நம் கலாச்சாரத்தில் மங்கலச் சின்னமாகக் கருதப்படும் ஸ்வஸ்திகாவையும், ஹிட்லரின் ஹாகென்குரூஸையும் ஒரே பெயரில் அழைப்பது குழப்பத்தை ஏற்படுத்தும்.( இதற்கு லயன் எடிட்டரின் பதில் இந்த வீடியோவில்: https://youtu.be/vz2VQms640Y?si=mDVoEWT78P4_VJq4

மொத்தத்தில், வரலாற்றை நேசிப்பவர்களும், காமிக்ஸ் ரசிகர்களும் தங்கள் சேகரிப்பில் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு பொக்கிஷம் இந்த "சாம்பலின் சங்கீதம்". அணுகுண்டு என்பது வெறும் ஆயுதம் மட்டுமல்ல, அது மானுடத்தின் மீது ஏற்படுத்திய ஆறாத வடு என்பதையும், இனி ஒருமுறை அத்தகையதொரு பேரழிவு எங்கும் நிகழவே கூடாது என்பதையும் இந்த நூல் உணர்த்துகிறது.


குறிப்பு:  முன்பதிவுகளுக்கு மட்டும் என சென்ற வாரம் வெளியான இப்புத்தகம் விற்றுத்  தீர்ந்து விட்டது. வாசகர்களின் வரவேற்பை பொறுத்து இன்னொரு பதிப்பு வெளியிடப்படலாம். தொடர்புக்கு:  

https://lion-muthucomics.com      

098423 19755 

Saturday, 8 November 2025

The Doors of Jaipur!

When I was in Jaipur recently, I didn’t plan to go around clicking pictures of doors…Yes, doors!  Yet somehow, from the grand gateways of City Palace to the small wooden doors tucked inside narrow lanes of the Pink City, that’s exactly what I ended up doing.

There’s something about Jaipur’s doors — the colours, the carvings, the way they stand proudly against the walls full of artwork — that makes you stop and stare. Some were exquisite even today with bright colours and brass studs, some faded with time but full of character. Even the faded paint and old locks seemed to tell a story of their own.


Each door felt alive, as if it had seen hundreds of people pass through it, each leaving behind a tiny piece of their story. I instinctively clicked many photos, not just to remember the trip, but to capture the soul of Jaipur — through its doors. After all, these were not just entryways; but silent witnesses to time, tradition, and life passing by.


So here they are — a few doors from the Paris of India - each one welcoming, guarding, and speaking in its own silent language….